Posts

Showing posts from July, 2022

கொங்கு மாரியம்மன் கும்மி

Image
  கொங்கு மாரியம்மன் கும்மி  " கும்மிப் பாட்டு " அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே உன்னை அடி பணிந்தே நானே அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே. கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே வாரும் – சற்று கண் திறந்து பாரும் – அந்த கருணை மாரி கதை படிக்க கவிகள் அள்ளித் தாரும் தேவாதி தேவர் போற்றும் சிவனுடைய பாலா – வள்ளி தெய்வயானை யின் லோலா – இந்த சிறியேனைக் கண் பாருமய்யா திருச்செந்தூர் வேலவா காமனைக் கண்ணால் எரித்த கயிலையங்கிரி வாசா – அன்பு கருணை உள்ளம் கொண்ட நேசா மாரி காந்தாரி கும்மி பாட காத்தருளும் ஈசா அழகு நல்ல தாமரையில் அமர்ந்த வித்வமணியே கல்விக்கு ஆன அதிபதியே எனக்கு அருள் புரிய வேணும் அம்மா கமல சரஸ்வதியே மலையத்துவசன் மகளாய் வந்த மதுரை மீனாட்சி தாயே – சற்று மணம் இறங்கி நீயே – உன் மலரடியே நான் பணிந்தேன் மைந்தனைக் காப்பாயே   வாருங்கம்மா வாருங்கம்மா வந்து இங்கே கூடுங்கம்மா வானவரும் தேவர்களும் வாழ்த்துரைக்க பாடுங்கம்மா கூடுங்கம்மா கூடுங்கம்மா கூடி கும்மி அடியுங்கம்மா கூடும் சபை தனிலே கூச்சமின்றிப் பாடுங்கம்மா பாடுங்கம்மா பாடுங்கம்மா பவளமுத்து வாய் திறந்து பண்புள்ள மாரித்தாயை பணிந்...