பொழில் ஆண்டவர் பொள்ளாச்சி முருகன்



கொங்கு திருநாட்டில் எழில் மிகு பொழில் ஆட்சி செய்கின்ற பொள்ளாச்சி மாநகரில் கோவில் கொண்டுள்ள பொள்ளாச்சி பொழில் ஆண்டவர் முருகன் திருக்கோவில்.


முடிகொண்ட சோழநல்லூர் என்னும் பொள்ளாச்சி நகரின் வரலாற்று பொக்கிஷம் ❤️.


பொள்ளாச்சி முருகன் திருக்கோயில் பற்றி பார்ப்போம்.

பொள்ளாச்சியில் 1000 ஆண்டு பழமையான சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

மிகவும் பழமையான திருக்கோவில்களில் பொள்ளாச்சியில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்த, கம்பீரமான தோற்றத்துடன் உள்ள, மற்றும் அழகான முருகபெருமானை நாம் இங்கு காணலாம். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதை கொங்கு சுந்தரபாண்டியன், கொங்கு திருபுவன் சக்ரவர்த்தி, விக்ரம சோழன் ஆகியோரால் கட்டப்பட்டதை இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.


மேலும் கொச்சியை ஆண்ட மன்னரின் கல்வெட்டும் உள்ளது. அதில் இந்த தலத்தின் பெயர், திருவகதீஸ்வர் முடையார் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த திருத்தலம் சிவதலமாக இருந்திருக்கலாம். இந்த திருத்தலத்தில் உள்ள சிற்பங்களை நாம் காணும்பொழுது, நமது தமிழர்களின் சிற்பக்கலை நுணுக்கமும் தேர்ச்சியும் தெரியவருகிறது. அநேகமாக ஒவ்வொரு இடத்திலும் நுட்பத்தை காணமுடிகிறது. கோவிலுக்கு எதிரே உள்ள மேல் விதானத்தில் உள்ள தாமரை போன்ற அமைப்பில் பன்னிரெண்டு ராசி சிற்பங்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழியின் உருவச்சிலை, அந்த வாயில் தொங்குகின்ற 3 வளையங்கள், இந்த மூன்று வளையங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருப்பது நம்மை அதிசயிக்க வைக்கிறது. முருகன் சன்னதிக்கு தென்பகுதியில் அமைந்துள்ள, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி சன்னதிகளுக்கு முன்பு 24 தூண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள சிறப்பு வேலை பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. அந்த சிற்பங்களில் உள்ளசில சிலைகளில் நகம், முடி, கண், கன்னத்தில் குழி விழுந்த பெண், இவைகளைக்காணும்பொழுது, நம் முன்னோர்களின் அறிவுத்திறன் , தொழில் நுட்பத்தின் மேன்மை புரிகிறது. முருகன் சன்னதிக்கு தென்பகுதியில் அமைந்துள்ள, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி சன்னதிகளுக்கு முன்பு 24 தூண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள சிறப்பு வேலை பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. அந்த சிற்பங்களில் உள்ளசில சிலைகளில் நகம், முடி, கண், கன்னத்தில் குழி விழுந்த பெண், இவைகளைக்காணும்பொழுது, நம் முன்னோர்களின் அறிவுத்திறன் , தொழில் நுட்பத்தின் மேன்மை புரிகிறது. முருகன் சன்னதிக்கு தென்பகுதியில் அமைந்துள்ள, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி சன்னதிகளுக்கு முன்பு 24 தூண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள சிறப்பு வேலை பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. அந்த சிற்பங்களில் உள்ளசில சிலைகளில் நகம், முடி, கண், கன்னத்தில் குழி விழுந்த பெண், இவைகளைக்காணும்பொழுது, நம் முன்னோர்களின் அறிவுத்திறன் , தொழில் நுட்பத்தின் மேன்மை புரிகிறது.



மேலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்,கண்ணப்ப நாயனார், பார்வதி கல்யாணம், மார்க்கண்டேயர், முருகன், தசாவதார சிற்பங்கள், சிவன் சன்னதி முன்பு, துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்று, லிங்கத்தின் மீது பால் சொரியும் பசு நேரில் உண்மையான பசுவைப்போலவே காட்சி தருகிறது. அம்மன் சன்னதி முன்பு, சரஸ்வதி, லட்சுமி, காமாட்சி அம்மன், காளி, மாரியம்மன், அர்த்தநாரீஸ்வரர், ராமர், சீதை, அனுமன், கண்ணன் காளிங்க நர்த்தனம், கோவர்த்தன கிரிதாரி ஆகிய அழகிய சிற்பங்கள் உள்ளன. 


கோவிலுக்கு பல மன்னர்களும் சிற்றரசர்களும் ஜமீன்தார்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.


பொள்ளாச்சி ஊர்கவுண்டராக இருந்த தெய்வத்திரு பழனிச்சாமிகவுண்டர் ஐயா குடும்பத்தினர் 

தெய்வத்திரு நாச்சிமுத்து கவுண்டர் ஐயா மற்றும் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஐயா அவர்களின் வழியில் சக்தி குழுமத்தினர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்துவருகின்றனர்.


பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் விவசாயிகள், தமிழிசை சங்கம் போன்ற அமைப்புகள் இணைந்து பக்தி நிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.


பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோவிலை தூய்மை செய்தும் திருக்கோவில் வரலாறுகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்.


தற்போது தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.





மேலும் தகவல்களை விரைவில்...


ஓம் சரவணபவ🙏













 @greenpollachi

@பொள்ளாச்சிஅருண்குமார்


Comments

Popular posts from this blog

கொங்கு மாரியம்மன் கும்மி

பொள்ளாச்சி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஐயா

Greenpollachi Environmental conservation organization